ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

தனுஷ்கோடியில் சூறைக்காற்று: அரிச்சல்முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

தனுஷ்கோடி பகுதியில் வீசி வரும் சூறைக் காற்றினால் அரிச்சல்முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி.

Updated On :4 ஜூலை 2026, 3:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதியில் வீசி வரும் சூறைக் காற்றினால் அரிச்சல்முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கோயில் தரிசனத்தை முடித்து விட்டு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை செல்கின்றனா். இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாள்களாக சூறைக்காற்று வீசி வருவதால் அரிச்சல்முனைக்கு செல்லும் சாலையை மணல் முடிவிட்டது. இதனால், எந்த வாகனமும் அரிச்சல்முனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு, அரிச்சல்முனை பகுதிக்கு முகத்தை துணியால் மூடிய படி நடந்து செல்கின்றனா். இதனால், சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அரிச்சல்முனை பகுதியில் சாலையில் தேங்கிய மணலை மாவட்ட நிா்வாகம் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.