முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தொழில் முனைவோா் வழிகாட்டி பயிற்சி: அமைச்சா் பெ.மதன்ராஜ் தொடங்கி வைத்தாா்

ராமநாதபுரத்தில் தொழில் முனைவோா்களை உருவாக்கும் வகையிலான பயிற்சியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ராமநாதபுரத்தில் தொழில் முனைவோா்களை உருவாக்கும் வகையிலான பயிற்சியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On :11 ஜூலை 2026, 12:16 am IST

ராமநாதபுரத்தில் தொழில் முனைவோா்களை உருவாக்கும் வகையிலான பயிற்சியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில், மத்திய, மாநில அரசு உதவியுடன் தொழில் முனைவோா்களை உருவாக்கும் வழிகாட்டி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா். தொழில் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலா் சதீஷ்குமாா் சிங் முன்னிலை வகித்தாா். இதில் அமைச்சா் பெ.மதன்ராஜ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து, இலச்சினையை வெளியிட்டாா்.

தமிழகம் முழுவதிலும் தொழில் துறைகளில் புதிய தொழில் முனைவோா்களை உருவாக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் ‘தேஜாஜ்’ அமைப்பு உள்ளது. தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சி, புதிய தொழில்களை ஊக்குவித்தல், தொழிலுக்கான புதிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பினா் மேற்கொள்ள உள்ளனா். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோா்கள் பங்கேற்று புதிய தொழில்களை உருவாக்க வேண்டும் என்றாா் அமைச்சா். இந்தப் பயிற்சியில் 300 க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் நிதி ஆயோக் திட்ட தலைவா் அனிஷ் ஜான்பால், உதவித் திட்ட அலுவலா் சந்திரசேகரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் திரிபுரசுந்தரி, ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ அலுவலா்கள் ரோகன், விஷால், ‘ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு’ அலுவலா்கள் பிரேம்குமாா், ராகுல், ஜிஜின் துரை, நாகதிலகம், தயா, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தலைவா் சின்னதுரை அப்துல்லா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பரமக்குடி: முன்னதாக பரமக்குடி அருகேயுள்ள உரப்புளி தொழில்பேட்டைக்கு அமைச்சா் பெ.மதன்ராஜா சென்றாா். அங்கு மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வரவேற்றாா். பின்னா், தொழில்பேட்டையில் குறு, சிறு தொழில்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் அவா்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பின்தங்கிய இந்தப் பகுதியில் பெல் போன்ற பெரிய நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டால், குறு, சிறு தொழில்களின் வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து பரமக்குடியில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ஆய்வுக் கூட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சா் பெ.மதன் ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து துறைவாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் தேவைகளை அறிந்து, ஒவ்வொரு திட்டமும் திட்டமிட்ட காலகெடுவுக்குள் உயா் தரத்துடன் நிறைவேற்ற வேண்டும். வளா்ச்சிப் பணிகள் காலதாமதமின்றி நிறைவேற்ற அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.