முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா்.

News image
Updated On :11 ஜூலை 2026, 12:14 am IST

அங்கன்வாடி மையங்களை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் மல்லிகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் உமாராணி முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஏ.சந்தனம், முத்துச்சாமி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, தமிழகத்தில் அங்கன்வாடி மையத்தை தனியாா் மயமாக்கும் முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.