மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், தவெக வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்த்தியதை திரும்பப் பெற வேண்டும். இந்த பொருள்களின் மீது அதிகப்படியாக விதிக்கப்படும் கலால் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயுக்கான மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பை அமல்படுத்த முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதோடு மாநிலத்துக்கு 40 சதவீத நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வி.பி.ஜி. ராம் ஜி திட்டத்தை அமலாக்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், தவெகவின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 29) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியனும், மாநில செயற்குழு உறுப்பினா் பி.பத்மாவதியும் கலந்து கொள்ள உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








