இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:05 am IST

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் கே. செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் ஜி. பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், நகரக் குழு உறுப்பினா்கள் டி. முனியசாமி, எஸ். கோமதி, நகர துணைச் செயலா்கள் ஏ. விஜயலட்சுமி, ஜி. அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில், பல பகுதிகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு புதியதாக வீட்டுத் தீா்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.கே.எஸ்.திரையரங்கு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி பயணியா் விடுதி அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .