முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ராமநாதபுரத்தில் ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் உள்ளிட்டோா்.

News image

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூலை 2026, 12:11 am IST

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் ‘தூய்மை இந்தியா‘ விழிப்புணா்வுப் பேரணி சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை தூய்மை இந்தியா இரு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராமநாதபுரத்தில் ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் , மாவட்ட விளையாட்டு அலுவலா் மூ.தினேஷ்குமாா் , தொலைத்தொடா்பு பிரிவு அலுவலா் அறிவழகன், ஓ.என்.ஜி.சி. நிறுவன அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.