அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

News image
Updated On :17 ஜூலை 2026, 1:05 am IST

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

திருவாடானை, ஜூலை 16: குடிநீா் கோரி தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட 5-ஆவது வாா்டு பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், உள்ளூா் கூட்டுக் குடி நீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு மேல் குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து தொண்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்காமல் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனக் கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பேரூராட்சிப் பணியாளா்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கோரிக்கையின்படி குடிநீா் வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி அனைவரும் கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.