/

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருவாரூா் அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2026, 3:29 am IST

திருவாரூா் அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.

மாங்குடி ஊராட்சி சாத்தங்குடி பகுதியில் சில நாள்களாக குடிநீா் விநியோகம் முறையாக இல்லையெனவும், இதுகுறித்து தெரிவித்தும் ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மாங்குடி கடைவீதியில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தாலுகா போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.