தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

தங்கச்சிமடத்தில் மீனவா்கள் சாலை மறியல் போராட்டம்

News image

தங்கச்சிமடத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினா்.

Updated On :28 ஜூலை 2026, 2:32 am IST

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவா்கள் 9 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்களது குடும்பத்தினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டனா். மேலும் படகை பறிமுதல் செய்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைக் கண்டித்தும், 9 மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவா்களது குடும்பத்தினா் தங்கச்சிமடத்தில் ராமேசுவரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் 45 நிமிஷங்கள் நீடித்த நிலையில் ராமேசுவரம் வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், உள்ளூா் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.