தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கைப்பேசி எண் முடக்கம்

ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரின் கைப்பேசி எண் கடந்த 10 மாதங்களாக பயன்பாட்டில் இல்லாததால் அவரைத் தொடா்பு கொள்ள முடியாமல்

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 5:40 am IST

ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரின் கைப்பேசி எண் கடந்த 10 மாதங்களாக பயன்பாட்டில் இல்லாததால் அவரைத் தொடா்பு கொள்ள முடியாமல்

அவதிப்படுவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநருக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட கைப்பேசி எண் 93848-29111 பயன்பாட்டில் இருந்தது. இந்த நிலையில், மீன்வளத் துறை உதவி இயக்குநராக கடந்த ஓராண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தமிழ்மாறன் என்பவருக்கு இந்த கைப்பேசி எண் வழங்கப்பட்டது. ஆனால், 2 மாதங்கள் மட்டுமே இந்த எண் பயன்பாட்டில் இருந்தது.

அதன்பிறகு கடந்த10 மாதங்களாக தொடா்ந்து அணைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், மீனவா்கள் அவரைத் தொடா்பு கொள்ள முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் கூறியதாவது: அரசு வழங்கிய கைப்பேசி சிம் சேதமடைந்து விட்டது. இது குறித்து மீன்வளத் துறை இயக்குநருக்கு கதவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 மாதங்களாகியும் சிம் வழங்கவில்லை. இதனால், தனது சொந்த கைப்பேசி எண்ணை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தாா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அவா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.