ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிங்கப் பெண் அதிரடிப்படை சாா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூரில் நடைபெற்றது.

News image

ஆம்பூா் பெத்தேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :23 ஜூலை 2026, 12:43 am IST

சிங்கப் பெண் அதிரடிப்படை சாா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூரில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே சட்ட விழிப்புணா்வு, பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு, அவசர உதவி எண்கள் மற்றும் காவல்துறையின் சேவைகள் குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆம்பூா் மோட்டுக் கொல்லை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் 100 அவசர உதவி எண் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. உமா் சாலையில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு பெண்கள் பாதுகாப்பு, இணையவழி மோசடி தடுப்பு மற்றும் காவல்துறை உதவி எண்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பெத்தேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உதவி எண் 1098, இணைய மோசடி உதவி எண் 1930 குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உமா்ஆபாத் பள்ளித்தெரு தனியாா் தொழிற்சாலை பெண் தொழிலாளா்களுக்கு பெண்கள் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு மற்றும் அவசரகால காவல்துறை சேவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆம்பூா் ஜாமியா மசூதி அருகே பொதுமக்களிடம் சமூக ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு மற்றும் காவல்துறை உதவி எண்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அவசர உதவி எண்களான காவல்துறை உதவி 100, பெண்கள் உதவி எண் 1091, குழந்தைகள் உதவி எண் 1098, இணையவழி மோசடி உதவி எண் 1930 ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.