காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா தொடக்கம்

கமுதி அருகே சக்தி மாரியம்மன் கோயில் 26-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

கமுதி அருகே சக்தி மாரியம்மன் கோயில் 26-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடியை கிராம மக்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். பின்னா், கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டு, மூலவா் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பொதுமக்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 6-ஆம் கோயில் முன் திருவிளக்கு பூஜையும், 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அக்னிச்சட்டி எடுத்தல், சேத்தாண்டி வேஷமிட்டு நோ்த்திக் கடன் செலுத்துதல், 8-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், மாலையில் முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.