திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, காந்திமதியம்மன் செப்புத் தேரில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா்.
இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், செப்பு கேடயத்தில் சுவாமி சந்நிதி வந்தடைந்த காந்திமதியம்மன், அங்கு செப்பு தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, அம்மன் ரதவீதிகளில் வலம் வந்தாா். விழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூர முளைக்கட்டு மடிநிறைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 18) ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ற்ஸ்ப்17ய்ங்ப்ப்ஹண்
காந்திமதியம்மன் எழுந்தருளிய செப்புத்தேரை, வடம் பிடித்து தரிசிக்கும் பக்தா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூர திருவிழா இன்று தொடக்கம்

நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: ரத வீதிகளில் கண்காணிப்பு தீவிரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



