தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த ஊராட்சிச் செயலா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கூகுடி ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த கூகுடி ஊராட்சிச் செயலா் சகாதேவன்.

Updated On :3 ஜூன் 2026, 1:36 am IST

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கூகுடி ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வைரவன் மகன் சகாதேவன் (51). இவா் கூகுடி ஊராட்சியில் ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, சம்பூரணி அருகே மங்களகுடி சாலையில் வந்த போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சகாதேவன்சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Story image