தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image

பரமக்குடியில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையின்போது கதவுகள் பூட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகம்.

Updated On :5 ஜூன் 2026, 6:26 am IST

பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சாா்பதிவாளா் அலுவலகத்தின் உள்ளே சென்று கதவுகளை மூடிவிட்டு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பணியாற்றும் அலுவலா்கள், தற்காலிகப் பணியாளா்கள், பத்திரப் பதிவுக்கு வந்தவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றுவோரின் கைப்பேசி எண்கள் மூலம் பணப் பரிவா்த்தனை குறித்தும், கணக்கில் வராத பணம் குறித்தும் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.