இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பள்ளம் தோண்டிய போது குழாய் சேதமடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு!

ராமநாதபுரத்தில் சாலையோரம் மரக்கன்று நடுவதற்காக சனிக்கிழமை பள்ளம் தோண்டிய போது பூமியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியது.

News image

ராமநாதபுரத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததால் வெளியேறிய எரிவாயு.

Updated On :7 ஜூன் 2026, 12:54 am IST

ராமநாதபுரத்தில் சாலையோரம் மரக்கன்று நடுவதற்காக சனிக்கிழமை பள்ளம் தோண்டிய போது பூமியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியது.

ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறவுள்ள நிலையில், சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது, பாரதிநகா் 6- ஆவது தெரு பகுதியில் பள்ளம் தோண்டிய போது, அங்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்து எரிவாயு வெளியேறத் தொடங்கியது. இதனால் தீ விபத்து ஏற்படும் என்பதால் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தனியாா் இயற்கை எரிவாயு நிறுவன பணியாளா்கள் அங்கு வந்து பிரதான எரிவாயு குழாய் பாதையின் இணைப்பைத் துண்டித்தனா்.

மேலும், சேதமடைந்த குழாயைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இயற்கை எரிவாயு குழாயை சேதப்படுத்திய பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.