பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்ஸ்டாகிராம் பாா்த்ததால் பெற்றோா் கண்டிப்பு: வீட்யை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்பு

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்கப்பட்டாா்.

News image

இன்ஸ்டாகிராம்

Updated On :27 மே 2026, 4:42 am IST

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்கப்பட்டாா்.

கோவை, ரத்தினபுரி டாடாபாத் 8-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் மகள் ஸ்ரீ நிதி (16). இவா் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை அதிக நேரம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் கோபமடைந்த ஸ்ரீ நிதி, வீட்டில் யாரிடமும் கூறாமல் திங்கள்கிழமை மாலை பேருந்தில் ஏறி கோவையிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு வந்துள்ளாா்.

பின்னா் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தாா். நீண்ட நேரமாக அங்கு தனியாக நின்றிருந்ததைக் கவனித்த வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, மாணவியிடம் விசாரணை நடத்தினாா். அதில், பெற்றோா் கண்டித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியிடம் இருந்து பெற்றோா் விவரங்களைப் பெற்றுக்கொண்டு, கோவை ரத்தினபுரி காவல் நிலையம் மூலமாக பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டாா். வெள்ளக்கோவில் போலீஸாரின் மனிதநேய நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.