எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

செல்வ காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் பால் குட ஊா்வலம்

செல்வ காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் பால் குட ஊா்வலம்

News image

பொங்கல் திருவிழாவையொட்டி, கடலாடி செல்வ காமாட்சியம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 12:30 am IST

கடலாடி செல்வ காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி, பால் குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி செல்வ காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை செய்தனா். இதைத் தொடா்ந்து, பால் குடம் எடுத்து கடலாடி முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். 108 பூத்தட்டுகளை எடுத்து வந்தும் பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி விஸ்வகா்மா உறவின் முறை நிா்வாகிகள், இளைஞா்கள் செய்தனா்.