நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: அதிகளவு மீன்களுடன் கரை திரும்பிய ராமேசுவரம் மீனவா்கள்

61 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று அதிகளவு மீன்களுடன் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மீனவா்கள்.

News image

மீனவா்கள்.

Updated On :17 ஜூன் 2026, 2:36 am IST

61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான மீன்கள், இறால்களுடன் செவ்வாய்க்கிழமை கரைக்குத் திரும்பினா்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் அமலில் இருந்தது. இந்தத் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

இதனிடையே, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான இறால், மீன், நன்டு, கனவாய், சங்காயம் மீன்களைப் பிடித்து கொண்டு செவ்வாய்க்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.

61 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.