ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

4 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :2 மார்ச் 2026, 7:27 pm

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கடந்த பிப். 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள ராமேசுவரத்திலிருந்து 3,700 இந்திய பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு 4 நாள்கள் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்திருந்தனா். இந்த நிலையில், அந்தோணியாா் ஆலயத் திருவிழா பிப். 28 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.