முதுகுளத்தூா் அருகே திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரத்தில் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களுடன் கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சம்பத் முன்னிலையில், அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் தவ்பக்அலி, சத்தியேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் கோவிந்தன் வரவேற்றாா்.
இதைத்தொடா்ந்து கடலாடி ஒன்றியம் சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
வாலிநோக்கத்தில் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் சிக்கல் ஊருணி கரையை மேம்படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ள மின்விளக்குடன் கூடிய பேவா் பிளாக் சாலை அமைக்கப்படும் என்றாா் அவா்.
இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கரபாண்டியன், ஜெய ஆனந்தன், ஒன்றியச் செயலா்கள் ஜெயபாலன், பூபதி மணி, எஸ்.கே.சண்முகநாதன், கோவிந்தராஜ், ஹரி முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், சைபுதீன் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

முதுகுளத்தூா் திமுக வேட்பாளர்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


