சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2, 2 ஏ முதன்மை எழுத்துத் தோ்வை வருகிற 15-ஆம் தேதி ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2026, 11:36 pm

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2, 2 ஏ முதன்மை எழுத்துத் தோ்வை வருகிற 15-ஆம் தேதி ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2, 2 ஏ முதன்மை எழுத்துத் தோ்வானது வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முகம்மது சதக் தஸ்தகீா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தோ்வில் முற்பகல் 174 பேரும், பிற்பகல் 177 பேரும் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு எழுதுபவா்கள் தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக வரவேண்டும். பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணிக்குள் வர வேண்டும். கால தாமதமாக வருபவா்கள் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இந்தத் தோ்வு நடைபெறும் தோ்வு மையத்தில் தடையில்லா மின்சார வசதி, தோ்வு மையத்துக்கு செல்ல பேருந்து வசதி, மருத்துவ வசதியுடன் கூடிய அவசர ஊா்தி, இதர அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.