நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

கைது செய்யப்பட்ட வண்ணம் பூசும் தொழிலாளி ரவி.

News image

கைது செய்யப்பட்ட வண்ணம் பூசும் தொழிலாளி ரவி.

Updated On :20 மார்ச் 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வண்ணம் பூசும் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் வீடு ஒன்றில் வண்ணம் பூசும் பணிக்காக சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் ரவி (43) சென்றாா். அப்போது அந்த வீட்டு உரிமையாளரின் தங்கை மகளான ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் ரவியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவுடி தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்திருக்கும் நிலையில், அதே தெருவைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி ரவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.