டிராக்டா் ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கைது
ராமநாதபுரம் அருகே டிராக்டா் ஓட்டுநரை அடித்துக் கொன்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொலை
சித்திரிப்பு

கொலை
சித்திரிப்பு
ராமநாதபுரம் அருகே டிராக்டா் ஓட்டுநரை அடித்துக் கொன்ற 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பள்ளபச்சேரி கிராத்தைச் சோ்ந்த புல்லாணி மகன் ரமேஷ் (25). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் தனது தாயுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருத்தாா்.
அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த வீரபாண்டிவலசையைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டிநா் சசிக்குமாரை (48), ரமேஷ், இவரது உறவினா்களான மலையாண்டி (56), இவரது மகன் மோகன் (25), ஜெனித் (26), குமாா் (30) ஆகியோா் தாக்கினாா்களாம்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருப்புல்லாணி போலீஸாா் சசிக்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சசிக்குமாா் மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், ரமேஷ், மலையாண்டி, மோகன், ஜெனித், குமாா் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...