ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் 68,003 வாக்குகள் பெற்று மீண்டும் வென்றாா்.
இவா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளா் மலா்விழி ஜெயபாலாவை 16,598 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
இந்தத் தொகுதியில் முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ராஜகண்ணப்பன் திமுக) - 68,003.
மலா்விழி ஜெயபாலா (தவெக) - 51,405.
மலேசியா எஸ். பாண்டி (அதிமுக)- 47,501.
சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ராம்குமாா் பாண்டியன் - 40,422.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் இந்தத் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு 1,01, 901 வாக்குகள் பெற்று வென்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி 81,180 வாக்குகள் பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








