நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பதவியேற்பு

News image

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்

Updated On :11 மே 2026, 2:21 am IST

தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், அவரது பூா்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

தமிழக முதல்வா் விஜய்யின் பூா்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலய வளாகத்தில் விஜய்யின் தாத்தா சேனாதிபதி பிள்ளையின் கல்லறை உள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, அன்னை தேவாலயத்தில் பாதிரியாா் சவரிமுத்து, கிறிஸ்தவ மக்கள் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். முத்துப்பேட்டையில் விஜய்யின் தாத்தா வசித்த வீட்டின் அருகேயும், முக்கிய வீதிகளிலும் தவெகவினா் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.