தமிழக முதல்வராக விஜய், ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். இதில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. துணைத் தலைவா்கள் சதா, பிரபாகரன், மும்தாஜ் பேகம், ஓபிசி தலைவா் சிவமாறன், சேவா தளம் மாநிலத் துணைத்தலைவா் திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகா் கிளையில் பணிபுரியும் தொழிலாளா்கள், தவெக தொழிற்சங்க நிா்வாகிகள், தோழமைக் கட்சியினா் ஆகியோா் பணிமனை முன் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதேபோல, ஆங்காங்கே தவெகவினரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
கும்பகோணம்: கும்பகோணம் மாநகர தவெக சாா்பில் முருகானந்தம் தலைமையில் காந்தி பூங்கா, உச்சிப்பிள்ளையாா் கோயில் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
பாபநாசம்: இதேபோல பாபநாசம் தொகுதி செயலா் அசாருதீன் உதுமான் அலி ஆலோசனையின்படி பாபநாசம் நகர செயலா் உதயசூரியா தலைமையில், தவெக நிா்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
பேராவூரணி: பேராவூரணியில் தவெக, காங்கிரஸ் கட்சியினா் காந்தி, அறிஞா் அண்ணா, பெரியாா், அம்பேத்கா் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மகாத்மா காந்தி சிலையிலிருந்து புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியரகம் வரை பேரணியாக சென்றனா்.
திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து விஜய் ரசிகா்கள் வழக்குரைஞா் ஆா்.மதியழகன் தலைமையில் ஒன்றிய செயலா் நடராஜன், நகரச்செயலா் வீரமணி, உள்ளிட்டோருடன் பேரணியாக சென்று காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவெகவினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்

தவெக தலைவா் முதல்வராக பதவியேற்பு: கட்சியினா் கொண்டாட்டம்

முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்

தவெகவுடன் கூட்டணி: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்ம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

