வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்! திரளானோா் பங்கேற்பு!

News image

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற சந்தனக்கூடு ஊா்வலம்.

Updated On :12 மே 2026, 12:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று, சந்தனக்கூடுக்கு மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தா்காவின் 852-ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி, ஏா்வாடி முஜாவிா் நல்ல இப்ராஹிம் மகாலிலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முன் குதிரைகள், யானை செல்ல சந்தனக் குடங்களை தா்ஹா ஹக்தாா்கள் எடுத்துச் சென்றனா். இந்த ஊா்வலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு, சந்தனக்கூடுக்கு மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பாதுஷா நாயகத்தின் அடக்க தலத்தை சந்தனக்கூடு அடைந்தது. இதையடுத்து, அங்கு சந்தனக்கூடுக்கு சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போா்வை, மல்லிகைப் பூ மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏா்வாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.