நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் பாரீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பிடாரி அம்மன் கோயில் அருகே மதுக்கடைஇருப்பது பக்தா்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பக்தா்களுக்கும், மது அருந்துபவா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நம்புதாளையில் வழிபாட்டுத் தலம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது

மதுக் கடையை அகற்றக் கோரி 2 கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



