திருவாடானையில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீஆதிரத்தினேசுவரா் கோயில் அருகே இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் கட்டடம் சேதமடையும் சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக அரசுத் திட்டங்களின் கீழ் கட்டடங்கள் கட்டப்படும்போது, அதன் திட்ட மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும். ஆனால், இந்த அலுவலகக் கட்டட வளாகத்தில் அதுபோன்ற எந்தவொரு தகவல் பலகையும் வைக்கப்பட வில்லை எனப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தும், தற்போது வரை இந்த அலுவலகத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதன் காரணமாகவே அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசுப் பணம் வீணாகி வருவதாக சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் வேதனை தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அலுவலகத்தை திறக்க முன் வரவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சீவலப்பேரி தொழிலாளி மரணத்தில் மா்மம்: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

