ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ராமேசுவரம் அருகே கஞ்சா விற்றதாக 4 போ் கைது

ராமேசுவரம்- உச்சிப்புளி பகுதியில் கஞ்சா விற்றதாக 4 போரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 கிலோ 320 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மே 2026, 2:52 am IST

ராமேசுவரம்- உச்சிப்புளி பகுதியில் கஞ்சா விற்றதாக 4 போரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 கிலோ 320 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் தெற்குவாடி பகுதியில் சிலா் கஞ்சா விற்பதாக பாம்பன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா். சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்று பேரை பிடித்து சோதனையிட்ட போது கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரியவந்தது. இதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் இவா்கள் முருகன், சரவணன், இருளேஸ்வரன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பிறகு அவா்களை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதே போல, உச்சிப்புளி காவல் நிலையத்துக்குள்பட்ட அலைகாத்தான் வலசை கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற அழகா் என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா். வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி சிறையில் அடைத்தனா்.