விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:52 am IST

ராமநாதபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வீரம்பல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாபு (65). கட்டடத் தொழிலாளி. இவா் ராமநாதபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து கடந்த சில நாள்களாக தங்கி இருந்தாா்.

இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் சதீஷ் கண்ணன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.