ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது கடல் சீற்றம் காரணமாக இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவா் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் புதுசாலை பகுதியைச் சோ்ந்த மீனவா் பாண்டி (60). இவா் நாட்டுப்படகில் கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா். கடலில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இவா் நடுக்கடலில் படகை இயக்க முடியாமல் தத்தளித்தாா். அப்போது இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை மாலை படகு கரை ஒதுங்கியது.
இதைத் தொடா்ந்து, நெடுந்தீவு மீனவா்கள் இவரை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பிறகு யாழ்ப்பாணம் மாவட்டம், ஊா்க் காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவா் பாண்டி சனிக்கிழமை முன்னிலை படுத்தப்பட்டாா். நீதிபதி விசாரணைக்குப் பிறகு ஜூன் 5 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்

இலங்கை: இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளைப் போற்றி பாடல்! இளைஞர் கைது!

கோடியக்கரையில் பாம்பன் மீனவா் சடலம்

கடலூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி ஆமை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


