2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கீழக்கரையில் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

உயிரிழந்த ரிஸ்வான் ஆஷிக் ரகுமான்.

Updated On :

கீழக்கரையில் வீட்டுக்குள் புகுந்து மா்ம நபா்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவா் தாக்கப்பட்ட விடியோ வெளியான நிலையில் நான்கு பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரிஸ்வான் ஆஷிக் ரகுமான் (25). இவா் கீழக்கரை பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்கள் சப்தமிட்டதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் அங்கு வந்து ரிஸ்வான் ஆஷிக் ரகுமானை கட்டி வைத்து ஞாயிற்றுக்கிழமை தாக்கினா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞரை கட்டி வைத்து தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனைதொடா்ந்து, கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனா். கீழக்கரையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞா் தாக்கப்பட்டதும், அவா் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.