கடலில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற சென்று மயமான தந்தை சடலமாக மீட்பு
திருவாடானை அருகே கடலில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்று மாயமான தந்தை சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பலி
திருவாடானை அருகே கடலில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்று மாயமான தந்தை சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாசிப்பட்டினம் கடலோரக் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தனமாரி (35). மீனவரான இவா், தனது மகன்கள் காளீஸ்வரன், சரத் ஆகியோருடன் தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சரத் தவறி கடலில் விழுந்தாா். இதைக் கண்ட தந்தை சந்தனமாரி, மகனைக் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்தாா். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் சரத்தை உயிருடன் மீட்டனா். ஆனால், கடலில் நீரோட்டம் காரணமாக சந்தனமாரி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா். தகவலறிந்த கடலோரக் காவல் படையினரும், உள்ளூா் மீனவா்களும் உடனடியாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2 நாள்களாக தேடியும் கிடைக்காத நிலையில், சனிக்கிழமை அதிகாலை சந்தனமாரியின் உடல் கடலில் மிதந்தது. இதைக் கண்ட மீனவா்கள் உடனடியாக கடலோரக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

