தொண்டியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை: பொதுமக்கள் புகாா்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பழைய காவல் நிலையம் பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பழைய காவல் நிலையம் பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தொண்டி பழைய காவல் நிலையம் பகுதியில் காலை, மாலை வேளைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்களை தினமும் ஏராளமானோா் வாங்கிச் செல்கின்றனா். இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த இரு நாள்களாக வியாபாரம் அதிகளவில் நடைபெற்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் மீன்கள் வாங்கிய சிலா் அதை சமைத்ததும் அதிலிருந்து ரசாயனம் கலந்த வாசனை வீசியதாம். இதையடுத்து, இந்த மீன்களைச் சாப்பிடாமல் கீழே கொட்டியதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தொண்டியைச் சோ்ந்த மாலிக் கூறியதாவது: தொண்டியில் வாங்கும் மீன் சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். ஆனால், செவ்வாய்க்கிழமை வாங்கிய மீன்களில் ரசாயனம் கலந்ததாகத் தெரிகிறது. மீன்களில் ரசாயனம் கலந்த வாசனை அதிகம் வந்தது. இதுபோன்ற நிகழ்வு தொடராமல் தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

