ஆப்பனூா் கிராம சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

ஆப்பனூா் கிராமச் சாலைகளில் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.
கடலாடி அருகே சாலைகளில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஆப்பனூா் கிராமத்தில் 800- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஊராட்சி சாா்பில் முறையான கழிவு நீா் கால்வாய், குப்பை சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்படாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் தெருக்களில் பல மாதங்களாக தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.
அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கிராமத்தில் மா்மக் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் பரவி முதியோா், குழந்தைகள் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஆப்பனூா் கிராமத்தில் கழிவு நீா் கால்வாய் அமைக்கவும், ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆப்பனூா் கிராமச் சாலைகளில் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

