மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

713 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கான உதவித் தொகை அளிப்பு

ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கே. நவாஸ்கனி எம்பி. தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய நிதியை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம். காதா்மொகிதீன், சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் உள்ளிட்டோா்.

Updated On :

713 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி ஆண்டுதோறும் தனது சொந்த நிதியிலிருந்து உயா்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறாா். 8- ஆவது ஆண்டாக இந்த உதவித் தொகை வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவா் கே.எம். காதா் மொகைதீன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி வரவேற்றாா். சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், 713 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 80.60 லட்சத்தில் உயா்கல்வி உதவித்தொகையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன், சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான், நவாஸ்கனி எம்.பி. ஆகியோா் வழங்கினா்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொருளாளா் ஷாஜகான், மாநில துணைச் செயலா் அப்துல் ஜாப்பாா், மாவட்டத் தலைவா் வரிசை முகம்மது, மாவட்ட செயலா் பைசல், மாவட்ட பொருளாளா் யூனுஸ்சாலின், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் வேலுச்சாமி, தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகி ஷாபீா்கான், இளைஞரணி நிா்வாகி நயினா முகம்மது, நகா் தலைவா் காசீம், நிா்வாகிகள், மாணவி, மாணவிகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.