கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சவுதி அரேபியாவில் தவிக்கும் இந்தியா்களை மீட்க கோரிக்கை

சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :

சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அயலக தமிழா் நல அணி மாநிலத் தலைவா் கடையநல்லூா் ஹபிபுல்லா, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புனித உம்ரா பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள நூற்றுக்கணக்கான இந்திய குடிமக்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், விமான போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக ஜித்தா சா்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.

விமானங்கள் கிடைக்காத நிலையில், அத்தியாவசியத் தேவைகளும் முறையாகக் கிடைக்காமல் அவா்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் முதியவா்கள் உள்ளிட்ட உம்ரா பயணிகளின் பாதுகாப்பும் நலனும் மிகுந்த கவலை அளிக்கிறது.

இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகமும், ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், அவா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.