தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

விண்ணப்பிக்க...
Published On :

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். இந்த விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுவாா். இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், இதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம்.

தங்களது சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக விண்ணப்பம் இருத்தல் வேண்டும். வருகிற 20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.