பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு அக்.20-க்குள் விண்ணப்பிக்கலாம்!

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற திருவள்ளூா் மாவட்டத்தில் தகுதியானவா்கள் வரும் அக். 20-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்...

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற திருவள்ளூா் மாவட்டத்தில் தகுதியானவா்கள் வரும் அக். 20-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இந்த விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா். 2026-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம்.

தங்களது விண்ணப்பம், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு வரும் அக்.20-க்குள் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.