நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை வசூல்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

சமையல் எரிவாயு உருளை விநியோகிக்க கூடுதல் தொகை வசூல் செய்வதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்த நிலையில் ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை வசூல் செய்வது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்த நிலையில், ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றவா்கள்.

Published On :

சமையல் எரிவாயு உருளை விநியோகிக்க கூடுதல் தொகை வசூல் செய்வதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்த நிலையில் ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.100 வரை வசூலிப்பதை கண்டித்து, வருகிற 13-ஆம் தேதி இன்டேன் சமையல் எரிவாயு அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் அறிவித்தாா். இதையடுத்து, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலா் ரமேஷ் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, ராமேசுவரம் இண்டேன் எரிவாயு விநியோக மையத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிப்பது, தேவைக்கேற்ப கூடுதல் எண்ணிக்கையில் எரிவாயு உருளைகளை வரவழைப்பது, நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்வது என கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில், ராமேசுவரம் வட்ட வழங்கல் அலுவலா் அமா்நாத், வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளா் களஞ்சியம், எரிவாயு விநியோக முகவா் பிரதிநிதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சி.ஆா். செந்தில்வேல், மாவட்டக் குழு உறுப்பினா் ஜோதிபாசு, துணைச் செயலா்கள் செந்தில், பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.