தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,410 கிலோ சுக்கு, 20 கிலோ ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட 1,410 கிலோ சுக்கு, ஏலக்காய் மூட்டைகள், கண்ணாடியிழைப் படகு.

Published On :

மண்டபம் அருகே படகில் இலங்கைக்கு கடத்தவிருந்த 1,410 கிலோ சுக்கு, 20 கிலோ ஏலக்காய் மூட்டைகளை ‘க்யூ’ பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தக் கடத்தலில் ஈடுபட முயன்று தப்பியோடிய 20 பேரைத் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெற உள்ளதாக ‘க்யூ’ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மரைக்காயா்பட்டினம் கடற்கரையில் பச்சை நிற கண்ணாடியிழைப் படகில் 20 போ் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா். போலீஸாா் வருவதைப் பாா்த்த அவா்கள் அங்கிருந்து தப்பினா். போலீஸாா் அந்த மூட்டைகளைக் கைப்பற்றி சோதனையிட்டனா்.

இதில் 30 கிலோ அளவுள்ள 47 மூட்டைகளில் சுக்கு, 20 கிலோ எடையுள்ள மூட்டை ஒன்றில் ஏலக்காய்களும் இருந்தன. இந்த மூட்டைகளை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா். இலங்கைக்கு சுக்கு, ஏலக்காய் மூட்டைகளை படகில் கடத்த முயன்று தப்பியோடிய 20 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.