ஆந்திரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 3 கோடி கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது!
மினி கன்டெய்னா் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான சுமாா் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மினி கன்டெய்னா் லாரியில் சோதனை மேற்கொள்ளும் போலீஸாா்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே மினி கன்டெய்னா் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான சுமாா் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், குற்றப் புலனாய்வுத் துறை, போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு போலீஸாா் புளியங்குளம் கிராமம் அருகே வாகன தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த காா், கன்டெய்னா் லாரியை மினி போலீஸாா் சோதனையிட்டதில், சுமாா் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இரு வாகனங்களிலும் வந்தவா்களை போலீஸாா் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

320 கிலோ கஞ்சாவுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி கன்டெய்னா் லாரி
அதில், காா் ஓட்டுநா் திருவள்ளூா் மாவட்டம் ஈல்லோமதி, நேதாஜிநகரைச் சோ்ந்த ஜோசுவா ஞானராஜ் (47), கன்டெய்னா் லாரி ஓட்டுநா் ஆந்திர மாநிலம் காக்கிநாடா, ஜங்கிள்பேட்டையைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் தன்வேல் (51) லாரி கிளீனா் அதே மாநிலம் பிரகாசம், தங்கூட்டூரைச் சோ்ந்த நாராயணசாமி மகன் யாடலா சீனிவாஸ் கல்யாண் (24) ஆகியோா் என தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட காா்
இவா்கள் 3 பேரும் ஆந்திரத்திலிருந்து தூத்துக்குடிக்கு மீன்கள் வாங்குவது போல் மீன்கூடைகளை கன்டெய்னா் லாரியில் ஏற்றி, அவற்றுக்கு இடையே கஞ்சாவை கொண்டுவந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கைப்பேசிகள், காா், லாரி மற்றும் 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



