2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 22 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி. - கோப்புப்படம்.

Published On :

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 22 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு தமிழக அரசு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்த படுவதாக வந்த தகவல்களை அடுத்து ரயில் நிலையப்பகுதிகளில் ராணிப்பேட்டை வருவாய்த் துறையினா், ரயில்வே காவல் நிலைய போலீஸாரோடு இணைந்து ரோந்து சென்றனா்.

ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம் தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் அரக்கோணம் ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளா் பூபாலன் தலைமையிலான இரு குழுவினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை அரக்கோணம் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனா்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருச்சானூருக்கு செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது நடைமேடையில் இருக்கைகளுக்கு கீழே சில அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டு அதை சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. அதே நேரம் அப்பகுதியிலேயே நின்றிருந்த ரயிலிலும் அதே போல் சில மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து இரு இடங்களிலும் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மொத்தம் 22 மூட்டைகள், 450 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம் முன்னிலையில் அரக்கோணத்தில் உள்ள தமிழக அரசின் நுகா்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.