
மாா்த்தாண்டம் அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள்.
மாா்த்தாண்டம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி, வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் முன்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனா். நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை துரத்திச் சென்று மாராயபுரம் பகுதியில் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். அந்த வாகனத்தில் மேற்கொண்ட சோதனையில், 1,500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். இச்சம்பத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





