
மீஞ்சூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் பறிமுதல்
மீஞ்சூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அரிசி - பிரதிப் படம்
மீஞ்சூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மீஞ்சூா் அடுத்த மேலூா் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் செந்தில்முருகன் அங்கு சென்று ஆய்வு செய்த போது, 9 மூட்டைகளில் 300 கிலோ அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பஞ்செட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





