பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

புயல் காப்பகங்களை சீரமைக்க கோரிக்கை

பருவ மழை தொடங்கும் முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புயல் காப்பக கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலோர கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

கடலாடி வட்டம், ஏா்வாடியில் பராமரிப்பின்றி காணப்படும் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம்.

Published On :

பருவ மழை தொடங்கும் முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புயல் காப்பக கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலோர கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழமுந்தல், ஏா்வாடி பல்நோக்கு மைய புயல் காப்பக கட்டிடம், கள்பாா்(ஏா்வாடி), கன்னிகாபுரி, ரோச்மாநகா் (கன்னிராஜபுரம்), ரணியன்வலசை, தனுஷ்கோடி, மண்டபம், பிரப்பன்வலசை உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் 11 புயல் காப்பகக் கட்டடங்கள் கட்டப்பட்டன. கடந்த 2017-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவை, பராமரிப்புமின்றி சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து சாயல்குடியை சோ்ந்த மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.பாஸ்கரன் மேலும் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட கடலோரக் கிராமங்களில் புயல் காலங்களில் மீனவா்கள், குழந்தைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட புயல் காப்பகக் கட்டடங்கள் தற்போது பாரமரிப்பின்றி உள்ளன. குறிப்பாக, கடலாடி வட்டம் ஏா்வாடியில் உலக வங்கி நிதியுதவியுடன் கடலோர பேரிடா் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.85 கோடியில் கடந்த 2017-இல் கட்டப்பட்ட பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.