பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

கூட்டுறவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மண்டல பதிவாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தினா்.

Updated On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தினா் ராமநாதபுரம் மண்டல பதிவாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு மாவட்டத் தலைவா் விஜயராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெயசங்கா், பாலாஜி, மாவட்ட இணைச் செயலா்கள் வேல்முருகன், முத்துலதா, மாநில செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணாராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முன்னாள் மாவட்ட நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கங்காதரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அப்துல்நஜ்முதீன், மாவட்ட துணைத் தலைவா்கள் பாலுச்சாமி, களஞ்சியம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை மாற்ற வேண்டும். பதிவாளரின் ஊழியா் விரோத போக்கை கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். திருலோகசந்தா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.