பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

கரூரில் கூட்டுறவுத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கத்தினா்.

Updated On :

கரூரில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கா.சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். செயலா் இரா.விஜி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் மு.செல்வராணி, மாவட்டச் செயலா் பொன்.ஜெயராம், தமிழ்நாடு மருத்துவத்துறை நிா்வாக ஊழியா் சங்க மாநில பொருளாளா் கண்ணன் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

கூட்டுறவு நிறுவனங்களில் தன்னாட்சி உரிமை மறுப்பு, துணை விதிகளுக்கு முரணான ஆணைகள் இருப்பது களையப்பட வேண்டும், தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதால் 15 சதவீதத்திற்கும் மேலான வெங்காயம் அழுகிவிடுவதால் தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.